நகரும்படம்

Cinema • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

19 ஆம் நூற்றாண்டு காலத்தில் லூமியேர சகோதரர்களின் கண்டுபிடிப்பான நகரும்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு "எட்வர்டு" என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் நகரும் படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார். "விக்டோரியா பப்ளிக் ஹால்" என்ற அரங்கில் "சினிமாஸ்கோப்" என்று விளம்பரப்பட்டு திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. இவ்வெளியீட்டைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. 1900 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, 'மவுண்ட் தெரு'வில் "வார்விக் மேஜர்" என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் 'எலெக்ட்ரிக்' திரையரங்காகும். மின் விளக்கு மூலம் ஒளிவீசும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like